ஜெர்மனியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நிகோ முல்லர் வெற்றி

ஜெர்மனியில் நடைபெற்ற கார் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் நிகோ முல்லர் வெற்றி பெற்றார்.

ஜெர்மனியின் ஹாக்கென்ஹெய்மில், கொட்டும் மழையிலும் DTM சீரிஸ் கார் பந்தயத்தின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. போட்டி தொடங்கியதும் சீறிப்பாய்ந்த கார்களில் சில பந்தயப் பாதையை விட்டு விலகி விபத்தில் சிக்கின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிக்கோ முல்லர் முதலிடம் பிடித்தார். ஜெர்மனியைச் சேர்ந்த மைக் ராக்கென்ஃபெல்லர் இரண்டாம் இடம் பிடித்தார். 3 வாரங்களுக்கு முன் நர்பர்க்ரிங்கில் நடத்தப்பட்ட 2019 ஓட்டுநர்களுக்கான சேம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்து பட்டத்தை வென்ற ரெனே ராஸ்ட் இந்த போட்டியில் 3-ம் இடம் பிடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *