சுண்டிக்குளம் சரணாலயம் நோக்கி படையெடுக்கும் பறவைகள்

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் குடியிருந்த வனஜீவராசிகள் தற்பொழுது சுண்டிக்குளம் சரணாலயம் நோக்கி படையெடுத்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக நந்திக்கடல் ஏரியில் நீர் முற்றிலும் வற்றி தற்பொழுது அப்பகுதியெங்கும் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றது.

இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்த பறவைகள் உள்ளிட்ட வனஜீவராசிகள் ஜீவனோபாயம் இன்றி தவித்த நிலையில் தற்பொழுது சுண்டிக்குளம் சரணாலயம் நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சுண்டிக்குளம் தேசிய வனம் இலங்கையில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இது கிளிநொச்சியின் வடகிழக்கில் ஏறக்குறைய 12 km (7 mi) தூரத்தில் அமைந்துள்ளது.

சுண்டிக்குளம் கடல் நீரேரியும் அதனைச் சுற்றி காணப்பட்ட இடங்களும் பறவை வனவிலங்குகள் காப்பகம் என 1938ம் ஆண்டு பெப்ரவரி 25ம் திகதி Fauna and Flora Protection Ordinance (No. 2) of 1937 சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *