எமது ஆட்சிக் காலத்திலும் வெள்ளை வேன் வீடுகளுக்கு வந்தது – பிரதமர்

‘எமது ஆட்சிக் காலத்திலும் உங்களுடைய வீட்டிற்கு வெள்ளை வேன் வந்தது. ஆனால் அதன் இருபக்கங்களிலும் ‘சுவசரிய’ என்று எழுதப்பட்டிருக்கும். நாட்டின் சுகாதாரத்துறையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை நாங்களே மேற்கொண்டோம்’ என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியக் கொடுப்பனவுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ்வாண்டுக்கான தேசிய ஓய்வூதியர்தின விழா, நாட்டின் 25 மாவட்டங்களிலும் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இன்று (08) கொழும்பிலுள்ள தாமரைத் தடாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது: அரச உத்தியோகத்தர்கள் குறிப்பிட்ட வயதெல்லையின் பின்னர் ஓய்வுபெற வேண்டுமென்ற கட்டாயமுள்ளது. எனினும் ஓய்வுபெறுவதற்கான வயதெல்லை அரசியல்வாதிகளுக்கு நிர்ணயிக்கப்படவில்லை. அதனாலேயே நானும், மஹிந்த ராஜபக்க்ஷவும், இரா.சம்பந்தனும் இன்னமும் சேவையில் ஈடுபடுகின்றோம் என்றும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *