தேசிய பாதுகாப்பு தொடர்பில் போலித் தகவல்கள் வெளியிட்ட இரு பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!

கோட்டை பொலிஸ் நிலையத்தின் நிர்வாக குற்றவியல் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள் இருவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான தவறான தகவல்களை சமூகமயப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் இருவரும் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 2 ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையொப்பத்துடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தகவல்களை சமூக மயப்படுத்தும் வகையில் கொழும்பு பிரதேச நட்சத்திர ஹேட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதனால் மீண்டுமொரு தாக்குதல் தொடர்பில் பரவலாக அச்ச சூழல் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *