சீரற்ற காலநிலை காரணமாக பழங்களின் விலை அதிகரிப்பு

கடந்த சில தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக உள்நாட்டு சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.

குறிப்பாக வாழை, மா, கொய்யா, பப்பாசி உள்ளிட்ட பழங்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், வாழைப்பழம் கிலோகிராம் ஒன்றின் விலை 150 முதல் 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *