பிரித்தானிய பிரதமரின் யோசனைக்கு தொடரும் நெருக்கடி..!

பிரித்தானியாவின் புதிய பிரதமரால் முன்வைக்கப்பட்ட ப்ரெக்ஷிட் யோசனையும் நிராகரிக்கப்படும் நிலைமை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மனியின் அதிபர் அஞ்சலா மேர்க்கல் மற்றும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர் இந்த தகவல் வெளியாக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியுடன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும்.

இதற்கான உடன்பாட்டு யோசனையை பொரிஸ் ஜொன்சன் முன்வைத்திருந்த நிலையில், குறித்த யோசனையை அஞ்சலா மேர்க்கல் எதிர்த்திருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் வடக்கு அயர்லாந்து சுங்க மையமாக செயற்படும் வகையிலான திட்டம் முன்வைக்கப்படாத வரையில், ப்ரெக்சிட் இணக்கப்பாட்டுக்கு சாத்தியம் இல்லை என்று அவர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *