கர்ப்பம் தரிக்க விரும்புவோர் செய்யக்கூடாதவை என்ன…?

பெண்கள் பிறக்கும் போதே அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக  எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்துவிடும். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும்  விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக ஆக குறையும்.

பெண் வயதுக்கு வந்த பின் சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் அதாவது fallopian tube வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு (ஓவுலஷன்) என்று பெயர்.

கர்ப்பம் தரிக்க  ஏதுவான நாட்கள், கருமுட்டை கருப்பையில் இருந்து வெளிவந்து 18 முதல் 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேரவேண்டும். அதனால்  இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து சராசரியாக 3-5 நாட்கள் வரை பெண்ணின்  பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.

பொதுவாக உடலுறவின் போது எண்ணெய், ஜெல் போன்றவை பயன்படுத்தினால் அவற்றை நிறுத்தி கொள்வது நல்லது. ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். முடிந்தவரை எந்த விதமான எண்ணெய் பொருட்களையும் உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும், பல திரவங்களையும், தண்ணீரையும் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அதாவது நீங்கள் கர்ப்பம் அடைய  நினைக்கும் நேரத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன் பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *