அடர்த்தி, கருமை நிறைந்த புருவங்கள்: டிப்ஸ் இதோ

புருவத்தின் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் விரைவில் வளர இயற்கையான வழியில் பலன் கிடைக்கும் அற்புத டிப்ஸ்கள் இதோ,

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்யை விரலால் தொட்டு புருவங்களின் மீது தடவி 45 நிமிடம் கழித்து ஈரமான துணியால் புருவங்களைத் துடைக்க வேண்டும். இதை தினமும் ஒரு முறை செய்தால் போதும்.

வெந்தயம்

1/2 டீஸ்பூன் வெந்தய பொடியுடன், 2 டீஸ்பூன் நீர் சேர்த்து புருவங்களின் மீது தடவி 45 நிமிடம் கழித்து கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் புருவங்களைக் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 3-4 முறை பின்பற்ற வேண்டும்.

விட்டமின் E

விட்டமின் E மாத்திரையில் உள்ள எண்ணெயை எடுத்து அதை இரவில் படுக்கும் போது புருவங்களின் மீது தடவி, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் ஒருமுறை செய்தால் போதும்.

கற்றாழை

கற்றாழையின் ஜெல்லை புருவங்களின் மீது தடவி சிறிது நேரம் கழித்து மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வர வேண்டும்.

பால்

பஞ்சுருண்டையை பாலில் நனைத்து புருவங்களின் மீது தடவி 20-25 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் 2-3 முறை செய்ய வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யை புருவங்களின் மீது தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து 1 மணிநேரம் கழித்து கிளின்சர் பயன்படுத்தி, புருவங்களை நன்கு கழுவ வேண்டும்.

வெங்காயம்

சிறியவெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதை புருவங்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து கிளின்சர் பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 4-5 முறை செய்ய வேண்டும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை புருவங்களின் மீது தடவி மசாஜ் செய்து 40-45 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை ஒரு நாளைக்கு பல முறை செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *