கோத்தபாய, விடுதலைப் புலிகளின் தலைவரின் கோரிக்கையை ஏற்கிறாரா?

தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை பார்ப்பதற்கு கூட கோத்தபாய ராஜபக்ச விரும்பவில்லை என கோத்தபாய ராஜபக்சவின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொட்ர்ந்தும் பேசிய அவர்,

தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளையும் நாங்கள் நிராகரிக்கின்றோம். நான் கோத்தபாயவின் ஊடக பேச்சாளர் என்ற அடிப்படையில் கூறுகிறேன் அவர் இந்த நிபந்தனைகளை வாசிப்பது கூட அர்த்தமற்ற பலனற்ற விடயம் என்று கருகிறார். நான் ஏற்கனவே தெளிவாக தெரிவித்து விட்டேன்.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச இந்த இந்தக்கோரிக்கைகள் தொடர்பில் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கட்டும் என நான் சவால் விடுக்கின்றேன்.

எமது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை பார்ப்பதற்கு கூட தயாரில்லை, 13 யோசனைகளையும் அவர் வெறுப்புடன் நிராகரித்துவிட்டார்.

பிரபாகரனின் கோரிக்கைகளை விட அதிகமான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *