சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘தமிழ் அரக்கன்’ முத்திரை

இலங்கை தபால் திணைக்களத்தால் பதினெட்டு அரக்கர்கள் (தஹா அத்த சன்னிய) என்ற தலைப்பின் கீழ் 18 முத்திரைகள் வெளியிடப்பட்டன.

அதில் ஒரு முத்திரை ‘தமிழ் அரக்கன்’ (தெமள சன்னிய) என்ற பெயரின் கீழ் கரிய நிறமுள்ள ஒருவர் விபூதித் தரித்து, குங்குமப்பொட்டு இட்டு, தலைப்பாகை போன்ற அடையாளங்களுடன் உள்ள ஒரு சித்திரத்தைத் தாங்கி வெயிடப்பட்டுள்ளது.

இந்த முத்திரை, தமிழரை அவமானப்படுத்தும் ஒரு செயற்பாடு என பலரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் அண்மையில் 18 முத்திரைகள் வெளியிடப்பட்டன. அவையாவன அபூத சன்னி,  (demon of madness) அமுக்க சன்னி, (demon causing fits of vomiting) வேதி சன்னி, (caused by the disturbance of bile and phlegm) வாத சன்னி, (caused by the disturbance of body wind) பீத சன்னி, (demon of fear), பிஹிறி சன்னி, (demon of deafness) கணா (கண்) சன்னி, (demon of blindness) பித்த சன்னி, (demon of bile)கோலு (செவி) சன்னி, (demon of dumbness) மூர்த்து சன்னி, (demon of unconsciousness) தமிழ்ச் சன்னி, (demon of Tamil) குல்மா சன்னி,  (demon of the disease of the spleen), கோர சன்னி, (demon of lameness) கிஞ்சால் சன்னி, (demon of flames) சீதள சன்னி, (demon of shivering) நாக சன்னி, (demon of cobra) தேவ சன்னி, (demon of deity) ஆகியவைகளே ஆகும்.

சடங்குகளின்போது ‘பேய்க்கென’ ஒரு உருவத்தைச் செய்து, பேயோட்டும் சடங்குகளைச் செய்வதுணடு. அதனடிப்படையிலேயே இந்த முத்திரைகளில் ஒவ்வொரு வகையான நோய்களுக்கும் வெவ்வேறு உருவங்களை அடையாளமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் ‘தமிழ் அரக்கன்’ என்ற பெயர் ஒரு நோய்க்குக் கொடுக்கப்படிருப்பதற்கான காரணம் அறியப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்துவதாக கூறப்படுகின்றது.

சில நோய்கள், அவை உருவாகும் நாடுகளின் அல்லது மக்கள் கூட்டத்தின் பெயரால் அழைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இது தமிழர் தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட நோய் என்பதினால் ‘தமிழ் அரக்கன்’ என பெயரிட்டிருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இந்த முத்திரை வெளியிடல் விடயத்தில் தமிழரை அடையாளமாகக் காட்டிய முறை முற்றிலும் தவறானதென பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக முத்திரையின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்பில் ‘பாரம்பரிய சிங்களப் பேயோட்டும் சடங்கு எனக் கூறப்பட்டு அதில் தமிழரின் அடையாளங்களைக் கொண்ட உருவத்தைப் பொறித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதொன்றவெனவும் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *