ஜனாதிபதி தேர்தல் – இதுவரையில் 2867 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 2867 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி முதல் நேற்று (திங்கட்கிழமை) வரையிலான குறித்த காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அதற்கமைய தேர்தல் விதி மீறல்கள் குறித்து 2748 முறைப்பாடுகளும் வன்முறை சம்பவங்கள் குறித்து 24 முறைப்பாடுகளும் 95 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 97 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதுடன், தற்போது அனைத்துக் கட்சியினரும் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.2Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *