திருகோணமலையில் மிகப்பெரிய ஏற்றுமதி வலயம் நிறுவப்படும் – ரவூப் ஹக்கீம்

திருகோணமலையில் மிகப்பெரிய ஏற்றுமதி வலயம் நிறுவப்படுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளதாவது, “பிரதமர் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி திட்டமொன்றை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

சிங்கப்பூர் நிதியுதவியில் இங்குள்ள 11 பிரதேச செயலகங்களிலும் வெவ்வேறுவிதமான தொழில் பட்டறைகளை அமைக்கவுள்ளோம்.

குறிப்பாக திருகோணமலை துறைமுகத்தையும் சீனக்குடா விமான நிலையத்தையும் மையமாக வைத்து, மிகப்பெரிய ஏற்றுமதி வலயத்தை நிர்மாணிப்பதற்காக திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

தனியார் முதலீகளை கொண்டுவந்து திருகோணமலை மாவட்டத்தில் வர்த்தக கேந்திர நிலையங்களை உருவாக்கினால், அரச தொழில்களுக்காக அலையவேண்டிய தேவை இருக்காது.

சஜித் பிரேமதாசவை ஆட்சிக் கதிரையில் அமர்த்துவதன் ஊடாக இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து, திருகோணமலை மாவட்டத்தை மிகப்பெரிய வர்த்தக கேந்திர நிலையமாக மாற்ற முடியும்.

மேலும் எமது கட்சி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளது. ஆனால், அவற்றை நாங்கள் மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *