கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி யாழ் பல்கலைக்கழக மாணவன் பலி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த விக்னராசா சாரங்கன் (வயது-21) என்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவனே உயிரிழந்தார்.

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் உள்ள அரசி ஆலையின் வெளிப்புறத்தில் காணப்பட்ட வெள்ள நீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது, மி ன்சாரம் தாக்கியதில் மாணவன் உயிரிழந்தார் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *