தந்தையை இழந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்த மாணவி சாதனை

இறுதி யுத்தத்தில் தந்தையை தொலைத்துவிட்டு சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் இரவிச்சந்திரன் யாழினி என்ற மாணவி முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் வணிகத்துறையில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார்

நேற்று பிற்பகல் வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பகுதியை சேர்ந்த குறித்த மாணவி புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் குறித்த மாணவி ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம் பெற்று சாதித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *