இருமலை ஒரே நாளில் போக்க சிறந்த வைத்தியம்!

இருமலானது இரண்டு வகையில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கிருமிகள் தாக்கத்தில் தொண்டையில் சளி உருவாகி, நுரையீரலுக்கு பரவி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

மற்றொரு வகை இருமலானது, தூசு, ரசாயனம் போன்ற பல விதமான கிருமிகள் காரணங்களால் அலர்ஜி போன்று தொடர்ச்சியான வறட்டு இருமல் ஏற்படுகிறது.வறட்டு இருமலை நிரந்தரமாக குணப்படுத்த, சூப்பரான டிப்ஸ் இதோ

தேவையான பொருட்கள்

பால்- 1 டம்ளர், தேன் – 1 டேபிள் ஸ்பூன்,முட்டை மஞ்சள் கரு–1

செய்முறை

பாலை நன்றாக சூடுபடுத்தி அந்த பால் பொங்கி வரும் போது முட்டையின் மஞ்சள் கருவை கலந்து நன்றாக கலக்க வேண்டும்.

பின் அந்த பால் இளஞ்சூடாக இருக்கும் போது, அதில் தேன் கலந்து, அதை தினமும் இரவு உணவு சாப்பிட்டு முடித்ததும் குடித்து வர வேண்டும். இதனால் தீராத வறட்டு இருமல் குணமாகிவிடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *