உங்க தொப்பையை வேகமா கரைக்க வேண்டுமா?

டயட் உணவுகளில் பேரிச்சை சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.

இதனை அன்றாட டயட்டில் பேரிட்சையை சேர்த்து கொள்வதனால் உடலில் உள்ள பல நோய்களை குணமாக்குகின்றது. அது மட்டுமின்றி உடல் எடையை விரைவாக குறைக்க உதவி புரிகின்றது.

பேரிச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் 44 %, நார்ச்சத்து 11.5%, புரதம் 5.6 %, கொழுப்பு 0.5 %, அது தவிர கால்சியம், காப்பர், மெக்னீசியம், சோடியம், உப்பு, விட்டமின், ஏ, பி1, ப்12, சி, நியாசின் மற்றும் எண்ணெய் சத்துக்கள் இருக்கின்றன.

குறிப்பாக பேரிச்சை டயட்டை மட்டும் நீங்கள் பின் தொடர்ந்தால் உடல் எடை, தொப்பை கரைந்து விடும். தற்போது இந்த டயட்டை எப்படி மேற்கொள்வது என பார்ப்போம்.

பின்பற்றும் முறை
  • காலை – 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால்
  • மதியம் – பச்சைக் காய்கறிகளுடன் குறைவாக அரிசி சாதம்,
  • மாலை – தே நீர் மற்றும் கோதுமை நிறைந்த பிஸ்கட்
  • இரவு – 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால் அதனுடன் வேக வைத்த பீன்ஸ் அல்லது மீன்.

இந்த டயட்டை 1 மாதம் பின்பற்றிப் பற்றினால் நீங்களே வியக்கும் அளவிற்கு தொப்பை குறையும்.

வேறு நன்மைகள்பேரிச்சையை காலை உணவாக சாப்பிடும்போது உங்களுக்கு பசியை தூண்டாது. அதோடு முழுச் சத்துக்களும் உங்கள் உடலில் இருக்கும்.

உள்ளுறுப்பு காயங்களை ஆற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தினமும் பேரிட்சை சாப்பிட வேண்டும்.

பேரிச்சையில் உள்ள புரதச் சத்துக்கள் உங்களின் தசை வடிவத்தையே மாற்றும் திறன் கொண்டது. தேவையற்ற கொழுப்புகள் மறைந்து ஆரோக்கியமான தசைக் கட்டமைப்பு உருவாகும்.

பேரிச்சை பழத்திலுள்ள ஃபீனாலின் பண்புகள் இன்சுலினை சுரக்க தூண்டுகின்றன. இவை சர்க்கரையை ஒழுங்குபடுத்தி சர்க்கரை வியாதியை தடுக்கிறது.

சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இதனால் புற்று நோய் முதல் பல ஆபத்தான நோய்கள் தடுக்கப்படுகின்றன.

பேரிச்சை உடலில் விடாப்படியாக தங்கி இருக்கும் கொழுப்பை உடைத்து முற்றிலும் செரிமானத்திற்கு உட்படுத்துகிறது. இதனால் கொழுப்பு வேகமாக கரைந்து உடல் சிக்கென்று ஆகிவிடுகிறது.

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற ஆரம்பிக்கும். ரத்த சோகையை தடுக்கும். சாதரண சளி, காய்ச்சலிலிருந்து டெங்கு காய்ச்சல் வரை உங்களை நெருங்காது.

தினமும் பேரிட்சைப் பழத்தை சாப்பிட்டால் அலர்ஜி பாதிப்பு அறவே போய்விடும்.

தினமும் உங்கள் இதயம் பலமடங்கு பாதுகாப்போடு இருக்க பேரிச்சம் பழம் கியாரண்டி தரும்.

உங்கள் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் எங்கும் கழிவுகளோ நச்சுக்களோ தங்காது.

தேவையற்ற கட்டிகள், நீர்க்கட்டிகள் உருவாகாது. சுறுசுறுப்போடு இருக்க உதவும்.

ஆண்களின் விந்தணு விருத்திக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால்போதும். தாது விருத்தியுண்டாகும். இரவில் படுக்கும் பொழுது இதை சாப்பிட வேண்டும்.

பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் விரைவில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை பெறலாம்.

கர்ப்பம் தரித்தபின் தினமும் 4 பேரிட்சைகளை சாப்பிட்டால் வலியில்லாத பிரசவத்தை தருகிறதாம். அதோடு பிரசவத்திற்குப் பின் வரும் உடல் பருமனை குறைக்கிறது.

கொடுப்பது நல்லது. ஏனெனில் பேரிச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *